முடிவிற்கு வருகிறது வரிசை யுகம் - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
Bandula Gunawardane
Litro Gas
Sri Lankan Peoples
By Jaso
வரிசையின்றிய விநியோகம்
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி
“தற்போது அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, இதற்காக லிட்ரோ நிறுவனம் தொடர்ச்சியாகக் கூடி இம்மாதத்திற்குள் எரிவாயு தட்டுப்பாட்டை முற்றாக முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி, வரிசையின்றி எரிவாயுவை பெற்றுக் கொள்ளும் வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி