கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டுப் பெண்!
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 180 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த போதைப்பொருளுடன் சந்தேக நபரான பெண்ணிடம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |