ஜே.வி.பியுடன் நேரடி விவாதமொன்றை முன்னெடுக்க தயார்: திலித் ஜயவீர சவால்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேரடி பொது விவாதமொன்றை முன்னெடுக்க தயாராக இருப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட பல கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாகவும், இதற்கமைய குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்
இலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்க விரும்புவதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தாய்நாட்டு மக்கள் கட்சி ஏன் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும் அனைவரையும் தெரியப்படுத்த விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தற்போது அரசியல் ரீதியில் ஒரே இடத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சட்டமூலங்களும் நிறைவேற்றப்படுவதாக திலித் ஜயவீர கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாக காட்டிக் கொண்டாலும், பின்னணியில் அவை அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |