உலக கிண்ண முதல் அரையிறுதிப்போட்டி: இமாலய இலக்கை தொடுமா நியூசிலாந்து (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
விராட் கோலி 106 பந்துகளுக்கு 100 ஓட்டங்களை பெற்று தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும், ஸ்ரேயஸ்ஐயர் 50 ஓட்டங்களுக்கு 66 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.
இதுவரையில், 42 ஓவர்கள் விளையாடியுள்ள இந்திய அணி 1 விக்கெட் இழந்து 303 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
அரைசதம் விளாசிய விராட்கோலி 113 பந்துகளுக்கு 117 ஓட்டங்கள் பெற்று டிம் சௌதீயின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து கே.ல் ராகுல் களமிறங்கியுள்ளார்.
உபாதை காரணமாக சுப்மன் கில் வெளியேற அடுத்த வீரராக களமிறங்கிய ஸ்ரேயஸ்ஐயர் 68 பந்துகளுக்கு 101 ஓட்டங்கள் பெற்று சதம் அடித்துள்ளார்.
இந்நிலையில், 70 பந்துகளுக்கு 105 ஓட்டங்கள் பெற்று ட்ரெண்ட் போல்ட்டின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்திலேயே ஆட்டமிழக்க உபாதை காரணமாக வெளியேறிய சுப்மன் கில் அடுத்த வீரராக களமிறங்கினார்.
இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 397 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்திற்கு 398 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
இரண்டாம்இணைப்பு
இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது.
தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் 65 பந்துகளுக்கு 79 ஓட்டங்களை பெற்ற சுப்மன் கில் உபாதை காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
அடுத்த வீரராக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், இதுவரையில், 26 ஓவர்கள் விளையாடியுள்ள இந்திய அணி 1 விக்கட் இழந்து 196 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
விராட்கோலியின் அரைசதத்தை தொடர்ந்து 200 ஐ தாண்டியது இந்தியா.
முதல் இணைப்பு
2023ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்,முதலாவது அரையிறுதி போட்டி ஆரம்பமாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று(15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இந்திய நேரப்படி 2.00 மணியளவில் ஆரம்பமாகிய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதிரடி ஆட்டம்
அதற்கமைய, இந்திய அணியின் தொடக்க வீரர்காரர்களாக அணியின் தலைவர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.
ஆரம்பத்திலேயே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து விராட்கோலி களமிறங்கியுள்ளார்.
மேலும், தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் சுப்மன் கில் அரை சதம் பெற்று 74 ஓட்டங்களும் விராட்கோலி 26 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இதுவரையில், 20 ஓவர்கள் விளையாடியுள்ள இந்திய அணி 1 விக்கட் இழந்து 150 ஓட்டங்கள் பெற்றுள்ளது.