தமிழின அழிப்பின் உயிர் வாழும் சாட்சியங்கள்: ஆறாத வடு சுமந்த அந்தக் குரல்கள்
ஈழத்தமிழர்களின் இன அழிப்பு சர்வதேச மட்டத்தில் ஒரு பேசுபொருளாகி பல்வேறு உலக நாடுகளில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், 21 ம் நூற்றாண்டின் அதி உச்ச இன அழிப்பை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் மண்ணில் அந்த மக்களின் இன்றைய மனநிலை தொடர்பான ஒரு ஆய்வுக்காக ஐபிசி தமிழ் குழு இறுதி யுத்தத்தின் அவலங்களை சுமந்து வாழும் முள்ளிவாய்க்கல் மக்களை சந்திக்க சென்றது.
இன்னமும் யுத்த வடுக்களையும் இழப்புகளின் பரிதவிப்பிலும் வாழ்ந்துவரும் அந்த மக்களின் இன்றைய நிலையும் அவர்களின் ஆதங்கமும் உலகத்தமிழினத்தின் காதுகளில் இன்று 16 ஆண்டுகள் கழிந்த பின்னும் எப்படி இருக்கிறது என்பதை எமது குழு சேர்ப்பித்திருந்தது.
இழப்புகளை பேச வார்த்தைகள் அற்றுக்கிடக்கும் எம் இனம் இப்போது அந்த மண்ணில் வாழவும் வழியாது தவித்துக்கொண்டிலுக்கிறது என்பதனை எமது கமரா கண்களும் எமது குழுவினரின் கேள்விகளுக்கு அவர்களின் பதிலும் மீண்டுமொருமுறை எடுத்து சொல்கிறது.
எனது குழு பேசிய அந்த மனிதர்கள் இன அழிப்பின் உயிர் வாழும் சாட்சியங்கள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
