யாழ்.பல்கலையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கையில் (Sri Lanka) இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவேந்தல் இன்றாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றது.
யாழ்.பல்கலை
இந்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தூபி முன் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தலின் போது ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள, ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!c |
