கோட்டா நாட்டை விட்டு ஓடாமல் தேர்தலை நடத்தி காட்டியிருக்க வேண்டும் - சீண்டும் எதிரணி!
"கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடாமல், விசேட தீர்மானம் ஒன்றின் மூலம் பதவியில் இருக்கும் போதே நாடாளுமன்ற தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்"
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
பிரதமர் பதவியை கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாவிற்கு வழங்க முடிவெடுத்தாலும் ஏன் சஜித் அதை பெறவில்லை என தென்பகுதி ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்கள் ஆணை மூலம் ஆட்சி
தொடர்ந்து பதிலளித்த அவர்,
"மக்கள் ஆணை ஊடாக வரும் அதிகாரத்தையே சஜித் பிரேமதாச ஏற்க விரும்பினார், முழு நாடே கோட்டாவை எதிர்க்கும் போது அவரின் ஆட்சியின் கீழ் எப்படி பிரதமராக இருக்க முடியும்.
கோட்டா நாடாளுமன்றத்தைக் கலைத்து விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்திருந்தால் அவர் பதவியை விட்டு, நாட்டை விட்டு ஓட வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றிருந்தால் சஜித் நிச்சயமாக ஆட்சியை பொறுப்பேற்றிருப்பார்." என லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
