மட்டக்களப்பில் உள்ளூராட்சி தேர்தலுக்கான பெப்ரல் அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு!
Batticaloa
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் மார்ச் 12 இயக்கத்தின் மூலமாக உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு சட்டம் சார்ந்த மற்றும் விழிப்புணர்வு செயலமர்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மார்ச் 12 இயக்கத்தின் இணைப்பாளர் சபாரத்தினம் சிவயோக நாதன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வளவாளராக கலந்துகொண்ட சட்டத்தரணி செல்வராசா துசியந்தன் மூலமாக தேர்தலுக்கான சட்டம் சார்ந்த விடயங்கள் அறிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி