விக்னேஸ்வரன் தலைமையில் தயாராகிறது பாரிய கூட்டணி - வடக்கு கிழக்கை குறிவைத்துத் திட்டம்!
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள பாரிய கூட்டணி ஒன்று தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய டெலோ, புளொட் மற்றும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரின் அணி ஆகியோர் தயாராகி வருகின்றனர்.
இந்த புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. இந்நிலையில் இப் புதிய கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் நாளை ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆராயவுள்ளனர்.
கட்டுப்பணம் செலுத்தல்
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட முக்கிய கட்சிகள் பலவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தி வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் யாழிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அரசியற் கூட்டணி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்னேஸ்வரனுடன் இணைவு
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி பிரிந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன.
அதேவேளை நாளை மறுதினம் ஊடக சந்திப்பின் வாயிலாக கூட்டணியின் சின்னம் பெயர் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அதேவேளை இந்த கூட்டணியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
You may like this