திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறாது - தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது!
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் மாதம் 9 ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்ச் 03 ஆம் திகதி தேர்தல் தொடர்பான புதிய திகதி அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபாநாயகருக்கு எழுத்து மூல கோரிக்கை
இதேவேளை, தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் தலையிடுமாறு சபாநாயகருக்கு எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.
தேர்தல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி