திருகோணமலையில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்
By Independent Writer
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக வயோதிபர்கள் மும்முறமாக தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
அதோடு காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்