வியட்நாமிலிருந்து திரும்பியதும் வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அநுர
Colombo
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Local government Election
By Sathangani
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.
வெசாக் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (06) காலை வியட்நாமில் (Vietnam) இருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்குத் திரும்பி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில் வாக்களித்தார்.
தனது குடியுரிமைக் கடமையை நிறைவேற்றுவதற்காக, தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி வாக்களிப்பதற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்