முடக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் ஒருபகுதி நாளை விடுவிப்பு
covid
jaffna
lockdown
By Vanan
யாழ். நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காலை முதல் விடுவிக்கப்படுகின்றது
. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் அரசடியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதுடன் அந்தப் பகுதி கடந்த மே 28ஆம் திகதி முடக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை காலை முதல் அரசடிப் பகுதி விடுவிகப்படுகின்றது.
அத்துடன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாவற்காடு கிராமம் முடக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி