காற்றாலை கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கதவடைப்பு

Tamils Mannar Strike Sri Lanka
By Sumithiran Aug 05, 2025 09:08 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

 மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டு வரப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) மன்னாரில் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்

 குறித்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் வகையில் மன்னார் நகர பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது.

காற்றாலை கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கதவடைப்பு | Lockdown Mannar Against Construction Of Wind Tower

கடற்றொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னார் தீவுக்குள் இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களுக்கான மூலப் பொருட்கள் எதுவும் தீவு பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

  இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்று வருகின்ற குறித்த அமைதி போராட்டத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,அருட்தந்தையர்கள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,மீனவ அமைப்புகள்,வர்த்தகர்கள்,பொதுமக்கள் ,இளைஞர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காற்றாலை கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கதவடைப்பு | Lockdown Mannar Against Construction Of Wind Tower

மேலும் மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (4) இரவு காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் திடீர் என புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பணிகள் இடை நிறுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! அரசாங்கத்தை எச்சரிக்கும் தமிழ் எம்.பி

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! அரசாங்கத்தை எச்சரிக்கும் தமிழ் எம்.பி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024