இங்கிலாந்துக்கு அழிவு வரும்! கொரோனா தளர்வு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!!
இங்கிலாந்து பிராந்தியத்தில் நடைமுறையில் உள்ள சகல கொரோனா கட்டுப்பாடுகளும் எதிர்வரும் 19 ஆம் திகதி நீக்கப்படுவதாக பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஏற்கவே அறிவித்திருந்த நிலையில் இந்த முடிவு மீது கடும் விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளை முழமையாக நீக்கும் இந்த நடவடிக்கையை விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிரதமரின் இந்த முடிவானது மக்களுக்கு சுதந்திர தினம் அல்ல மாறாக இது ஒரு ஆபத்தான நெறிமுறையற்ற சோதனையென மருத்துவ விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 4,000 க்கும் மேற்பட்டவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.
'லான்செட் ' மருத்துவ இதழுக்கு எழுதப்பட்டு நேற்று வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்களை பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் அதற்குப் பதிலாக, இளைய சமூகத்தை நோய்த்தொற்றுக்கு ஆளாக்குவதற்காக வேண்டுமென்றே இவ்வாறான நகர்வுகளை செய்வதாக குயின் மேரி பல்கலைக்கழகத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் கண்டித்துள்ளார்.
இந்த முரண்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள 'லான்செட் ' இதழின ஆசிரியர், 'பிரித்தானிய அரசாங்கம் விஞ்ஞானிகளின் பரிந்துரைகளுக்கு மாறாக, ஜூலை 19 அன்று கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் இந்த நகர்வு குறித்து விஞ்ஞானரீதியில் ஒருமித்த கருத்தும் இல்லையெனவும் மாறாக, ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.