ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு லண்டனில் அறிமுக நிகழ்வு
ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் “சயனைட்” நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் 14ஆம் நாளன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை லண்டனில் இடம்பெறவுள்ளது.
ஐந்து சமூக இலக்கிய அமைப்புகள் இணைந்து நடாத்த ஐந்து நிறுவனங்கள் அனுசரணை வழங்க சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு லண்டனில் பிரமாண்ட அரங்கில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஜனவரி 03ஆம் நாள் சென்னையிலும் கடந்த மார்ச் 29ஆம் நாள் கிளிநொச்சியிலும் வெளியீடு கண்ட பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதையான “சயனைட்” எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஈழத் தமிழ் வரலாறு குறித்த நாவல் ஆகும்.
மறுபதிப்பு
நிஜக் கதையை தழுவிய வீரகாவியத்தின் துயரமாக அமையப்பெற்ற தீபச்செல்வனின் இந்த நாவல் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு இடையில் மறுபதிப்பையும் கண்டு வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், லண்டனில் Alperton Community School, Ealing Road, HA0 4PH (Next to Alperton Underground Station) எனும் முகவரியில் மாதவி சிவலீலன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் நாவல் குறித்து பா. நடேசன், ரஜிதா சாம், சக்திவேல், மயூரன், சுகுணா, ஆனந்தி, துவாரகி, மிதுனா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
