நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை
Sri Lanka
Nigeria
Kenya
By Sumithiran
நைஜீரிய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்ததாக தெரிவித்து நைஜீரிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள M/T Heroic IDUN கப்பலில் உள்ள எட்டு இலங்கை பணியாளர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.
நைஜீரியாவிற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.
நைஜீரியா சென்ற தமிழர்
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் நைஜீரியாவின் லாகோஸ் நகருக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நலன் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை விரைவாக நாடு கடத்துவது குறித்து கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி நைஜீரிய அதிகாரிகளால் கப்பல் கைப்பற்றப்பட்டது குறிப்பித்தக்கது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி