பைடன் தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் அமெரிக்க மக்கள்
Joe Biden
lost
Democratic Party
By Vanan
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைவடைந்து வருவதை மாநில ஆளுனர்களின் தெரிவுகள் மூலம் புலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோ பைடன் அதிபர் தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாநிலங்களில் கூட வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கிளேன் ஜங்கின் வெர்ஜீனியா மாநில ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டெர்ரி மெக்அலிஃப்பை தோற்கடித்து தமது வெற்றியினை கிளேன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தமை கட்சிக்குள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.