இலங்கை வந்த செக் குடியரசின் முதலாவது பயணிகள் விமானம்
                                    
                    Bandaranaike International Airport 
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு செக் குடியரசில் இருந்து இயங்கும் Lot Polish Airlines, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இன்று (25) காலை விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானம் செக் குடியரசில் இருந்து இலங்கைக்கு இயங்கும் Lot Polish Airlines இன் முதலாவது பட்டய விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டய விமானத்தில் 252 சர்வதேச சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இன்முகத்துடன் வரவேற்கப்பட்டனர்
இந்த முதலாவது விமானமானது நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

மேலும் பயணிகள் அனைவரும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
மேலும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் சிலோன் டீ பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        