லொத்தர் பரிசு பெற்றவரைக் கடத்திய மர்ம கும்பல்!
CID - Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Pradheepan
இலங்கையில் ஏழரைக் கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற கும்பலொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
கண்டி அக்குறணை பிரதேசத்தில் வசிக்கும் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவரைக் கடத்தி, கம்பளையில் உள்ள வீடொன்றில் பத்து நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நான்கு பேர் கைது

கடந்த 27ஆம் திகதி தம்புள்ளையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் கம்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மரக்காலை உரிமையாளரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.