அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் - கோடிகளில் புரளும் கனேடியர்
Lottery
Canada
By Kiruththikan
கனேடியர் ஒருவர் சில மாத இடைவெளியில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.
மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 64 வயதான ஜிப்ரி குர்செகென்ஸீ (Jeffrey Gurczenski ) என்பவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.
லொட்டோ ஆல் லொத்தர் சீட்டிலுப்பில் அண்மையில் 91000 டொலர்களை குர்செகென்ஸீ வென்றிருந்தார்.
அண்மையில் மீண்டும் 150,000 டொலர்களை அவர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.

இந்த பரிசுத் தொகையைக் கொண்டு குடியிருப்பு ஒன்றை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு வென்றெடுக்கப்பட்ட டிக்கட் மிஸ்ஸிசாகுவா டிக்ஸி வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து அடுத்து பரிசுத் தொகை வென்றெடுக்க கிட்டியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக குர்செகென்ஸீ தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி