இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 175,250 ரூபாவாக பதிவாகி உள்ளது. 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 160,700 ரூபாவாகவும் உள்ளது.
இதேவேளை, 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை ரூபாய் 153,400 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கம் அவுன்ஸ் விலை
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 621,025 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,910
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,090
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,180
