டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: சிசிடிவியில் சிக்கிய இரண்டு மர்ம நபர்கள்(படங்கள்)
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியிலுள்ள உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு நேற்று (26) மாலை 5.48 மணியளவில் பதிவாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தமானது 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு, ஏராளமான மக்கள் உணவு, உடையின்றி தவித்து வருகின்றனர்.
போர் நிறுத்தம்
அண்மையில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டதற்கிணங்க சில பணயகைதிகளையும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருப்பதால் இப்போர் சர்வதேச ரீதியாக மாறியுள்ளது.
அரசு கடற் பகுதிகளில் இஸ்ரேல் நோக்கி செல்லும் அல்லது இஸ்ரேலிலிருந்து வரும் கப்பல்கள் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹவுதி தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
குண்டு வெடித்த இடத்தில் கடிதம்
இதில் இந்தியாவுக்கு வந்துக்கொண்டிருந்த கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று இஸ்ரேலிய தூதரகத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்திருக்கிறது.
இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்தில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
"இஸ்ரேல் தூதரகம் அருகே வெடித்தது குண்டு அல்ல. அது சக்தி வாய்ந்த பட்டாசு. கவனத்தை ஈர்க்கவே மர்ம நபர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்” என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கெமராவில் இரண்டு சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை டெல்லி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தங்களை இஸ்ரேலியர் என பொதுவெளியில் அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் இஸ்ரேல் நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |