அந்தப்பேச்சுக்கே இடமில்லை : இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
காசாவில் போர் நிறுத்தம் கிடையாது
"ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும். காசாவில் உள்ள ஆயுதக்குழுக்களை அழிக்க வேண்டும். பாலஸ்தீன சமூகத்தில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். இந்த மூன்றும் நிறைவேறும் வரை காசாவில் போர் நிறுத்தம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1400 பேரை கொன்று 240 ற்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற பின்னர் காசாமீது முழு அளவிலான போரை இஸ்ரேல் படையினர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
இந்த தாக்குதலில் காசாவில் பெண்கள்,சிறுவர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவானோர் காயமடைந்து சொத்துக்களும் பாரியளவில் அழிவுக்குள்ளாகியுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |