வெள்ளத்தில் மூழ்கும் அவுஸ்திரேலியாவின் தலைநகர்:அவசர நிலை அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் (Australia) கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையால் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத் தலைநகரான சிட்னியில் ( Sydney) அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக பல தாழ்வான புறநகர் பகுதிகளில் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
அத்துடன் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில், 13 பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உதவிக்காக 297 அழைப்புகள் விடுக்கப்பட்டதாகவும் அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய வெள்ளம்
அதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசர சேவைகள் பிரிவினரால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில், நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளில் பத்து அவசரகால வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் சிட்னி நகரின் வடமேற்கில் பாரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |