தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..!

LTTE Leader Velupillai Prabhakaran Sonnalum Kuttram
By Kiruththikan Feb 23, 2023 08:55 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விவரித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்தின் மெய்ப் பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள்.

எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும்.

பொதுவெளியில் விடுதலைப் புலிகளின் தலைவர்

தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead

அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

எப்போது தோன்ற வேண்டும்? அதனை எப்போது சொல்ல வேண்டும்? என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும். நானோ? நீங்களோ? வேறு ஒருவரோ முடிவு செய்ய முடியாது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக் கட்டப் போர் முடிந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவர் உடல் என்று சொல்லி ஏதோ ஒரு உடலை எல்லாம் காட்டினார்கள்.

ஆனால் அப்போது இருந்து சர்வதேச சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் சர்வதேச சூழ்நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. ஒன்று, இலங்கையில் உள்நாட்டிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

ராஜபக்சர்களை வெற்றி வீரர்கள் என்று கொண்டாடி எவ்வாறு ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே போல சிங்கள மக்கள் ராஜபக்சர்களை பதவியிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இன்னமும் அவர்களுக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்பட்டதன் விளைவு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போர்

தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead

2009 இற்கு முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்த போது உலக நாடுகளுக்கு எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையை சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கம் என்பதை மறைத்து பயங்கரவாத இயக்கம் என்று சித்தரித்தார்கள். அப்போதைய இந்திய அரசும் அதற்கு ஒத்துழைத்தது

இலங்கையில் தடை விதித்தார்கள் என்றால், இந்தியாவில் அதற்கு முன்னதாகவே தடை விதித்தார்கள். இதன் விளைவாக உலக நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டது.

இதன் விளைவாக 2009இல் இடம்பெற்ற போரின் போது 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் சிங்கள அரசுக்கு தேவையான இராணுவ உதவிகளை, நிதி உதவிகளை செய்தன.

விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கினார்கள். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது.

இப்போது இருக்கின்ற பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை விட இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினை உருவாகிவிட்டது.

இந்தியாவுக்கு பேரபாயம்

தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்று நிற்பதனால் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல. இந்தியாவுக்கு பேரபாயம் தென்பகுதியில் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது.

வடக்கிலும் சீனாவால் தொந்தரவு இருக்கிறது. தெற்கிலும் சீனாவால் தொந்தரவு ஏற்படுமானால் அதன் விளைவு என்னவாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வேறு சீனாவினால் இந்தியாவுக்கு வந்திருக்கின்ற அபாயம் வேறு என்று பார்க்கக் கூடாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பிரச்சினைகள் என்று பார்க்க வேண்டும்.

அப்போதுதான் இந்தியாவுக்கு வரும் அபாயங்களை தடுக்க முடியும். ஈழப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

அந்தக் கோணத்தில் பார்க்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருப்பதால் தான் தேசிய தலைவர் பிரபாகரன் இருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டி வந்தது.

பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

இதனால் பல்வேறு தொடர்விளைவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.   


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி, அச்சுவேலி, London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொங்க் கொங்க், Hong Kong, அவுஸ்திரேலியா, Australia, பிரித்தானியா, United Kingdom

31 Jan, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

30 Jan, 2025
அகாலமரணம்
அகாலமரணம்

நீர்வேலி, Toronto, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

30 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, கொக்குவில் கிழக்கு

31 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், La Courneuve, France

30 Jan, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Lüdenscheid, Germany

30 Jan, 2025
மரண அறிவித்தல்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Amsterdam, Netherlands, London, United Kingdom

25 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Trichy, British Indian Ocean Terr.

29 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France

16 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Cheddikulam

05 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, கல்லடி, Harrow, United Kingdom

02 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் மேற்கு, இணுவில் தெற்கு, Harrow, United Kingdom

30 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Harrow, United Kingdom

12 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, Uetendorf, Switzerland

28 Jan, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கண்டி, Nigeria, Scarborough, Canada

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
10ம் ஆண்டு, 1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், வவுனியா

01 Feb, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா

29 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அளவெட்டி, திருகோணமலை

11 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, யாழ்ப்பாணம், Tororo, Uganda, Cambridge, United Kingdom, London, United Kingdom

17 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018