நேதாஜியை நேசித்த தலைவர் பிரபாகரன்: சிறு வயதுகளில் தேடிப் படித்த விடுதலை போராட்ட வரலாறுகள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், பத்து பதினொரு வயதுகளிலேயே விடுதலை போராட்ட வரலாறுகள் மற்றும் நேதாஜி வரலாறு குறித்து ஆர்வம் கொண்டவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிறு வயது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம்,
10 ,11 வயதுகளிலேயே விடுதலை போராட்ட வரலாறுகள் மற்றும் நேதாஜி வரலாறு குறித்து இந்தியாவில் இருந்து 50 பைசா 1 ரூபாய்களுக்கு வெளியாகும் சிறு சிறு புத்தகங்களை வாங்கி என்னுடைய சகோதரரும் தலைவர் பிரபாகரனும் படித்து பரிமாறி கொள்வதை பார்த்து இருக்கிறேன்.
நாங்கள் இரவுகளில் பல்வேறு வீடுகளின் விழாக்களுக்கு சென்று வந்தாலும், தலைவர் பிரபாகரனின் தந்தை மிகவும் கட்டுப்பாடு உடையவர் என்பதால் அவருக்கு வெளியே வருவதற்கு எப்போதும் அனுமதி கிடைக்காது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமை பருவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில்....