விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்
Tamils
Jaffna
Sri Lanka
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நேற்று (09) அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீர மரணம்
இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்