நிலவில் மோதிய ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்!
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற நிலையில் சுற்றுப்பாதையில் சுழன்று நிலவில் விழுந்ததாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் (Roscosmos) அறிவித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளில்லா இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு தயாரானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம்
50 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் இதுவாகும்.
நிலவின் ஒரு பகுதியை ஆய்வு செய்வதற்காக லூனா-25 விண்கலம் திங்கட்கிழமை (21) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கனிமங்கள் நிலாவில் உள்ளதாகக் கருதும் விஞ்ஞானிகள் அதன் ஒரு பகுதியை ஆராயவே இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)