24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
srilanka
covid19
corona
colombo
gotabaya
By S P Thas
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய 24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களுடன் தொடர்புடைய 11 பேரும் இதில் அடங்குவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 13 பேர் பிரதான போதை பொருள் வலையமைப்பை நடத்தி செல்பவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குறித்த 24 பேரையும் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
விரைவில் அவர்களை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி