இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சம்பவம்! எண்மர் வைத்தியசாலையில் (படங்கள்)
Colombo
Trincomalee
SriLanka
Accinent
Galewala
Galewala Police
SL Police
By Chanakyan
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக கலேவல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து பயணித்த சொகுசு பேருந்து கலேவல காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதுண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்