லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு

Tamils Jaffna India
By Sathangani Oct 11, 2025 07:24 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02  வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றையதினம் (10) இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

திருக்குறளின் 1,330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் சகோதரர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து பாடல்களாக வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கோரிக்கை

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கோரிக்கை

வெளியிடப்பட்ட படைப்பு

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது.

லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு | Lydian Nadhaswaram Thirukkural1330 Vol2 Out Jaffna

தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அதாவது தேனிசை தென்றல் தேவா, உன்னிமேனன் மற்றும் இலங்கையில் இருந்தும் 25இற்கு மேற்பட்ட பாடகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் இந்த படைப்பில் பாடியுள்ளனர்.

அமைச்சரவையின் மாற்றத்திற்கான காரணம் : அரச தரப்பு விளக்கம்

அமைச்சரவையின் மாற்றத்திற்கான காரணம் : அரச தரப்பு விளக்கம்

பலர் வாழ்த்து தெரிவிப்பு

இதன் முதல் வெளியீடு தமிழகத்தில் இடம்பெற்ற நிலையில் இரண்டாவது வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வைகோ, திருமாவளவன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு | Lydian Nadhaswaram Thirukkural1330 Vol2 Out Jaffna

பாகம் 02 வெளியீட்டின் முதல் இறுவட்டினை யாழ். இந்திய துணை தூதுவர் சிறீமான் சாய் முரளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய இறுவட்டுகளை தமிழ்த்துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். தமிழ்ச்சங்க செயலாளர் லலீசன், பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் ஆகியோர் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026