யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தின நினைவேந்தல்: பொதுச்சுடர் ஏற்ற ஏற்பாடு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Pavi
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (27) மாவீரர் தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் பொதுத்தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாளை மாலை சரியாக 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் பொதுத்தூபி
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், அஞ்சலி செலுத்த வருகை தருவோர் மலர்கள் மற்றும் மாலைகளைக் கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி