நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்!..அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation Weather
By Sathangani Nov 29, 2024 03:49 AM GMT
Report

அம்பாறை (Ampara), காரைதீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் ஒருவர் மற்றும் குறித்த உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் நேற்று (28) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்தவர்களை நேற்று பிற்பகல் சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து மத்ரஸா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது!

உழவு இயந்திர விபத்தில் பலியான மத்ரஸா மாணவர்கள்: நான்கு சந்தேகநபர்கள் கைது!

நீரில் மூழ்கிய 8 பேர் 

இந்த நிலையில் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நேரத்தில் 11 மாணவர்கள் மற்றும் சிலர் பயணித்த உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், உழவு இயந்திர சாரதி உட்பட 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.

நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்!..அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல் | Madrasa Students Drowned Two Remanded In Custody

சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் சடலங்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு நபரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மற்றைய மாணவனை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆபத்து காரணமாக பேருந்து சேவை கூட நிறுத்தப்பட்டிருந்த போதும் இராணுவத்தினரின் அறிவுறுத்தலை மீறி பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியதாக காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுர அரசின் அதிரடி: பறிபோகுமா நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

அநுர அரசின் அதிரடி: பறிபோகுமா நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை : ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026