கொரோனா காரணமாக மூடப்பட்ட நீதவான் நீதிமன்றம்!
ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்படி பதிவாளருக்கு நேற்று தொற்று உறுதியானதை அடுத்து, இன்று மேற்கொள்ளப்பட்ட வழக்குகளை வேறொரு தினங்களுக்கு பிற்போடுமாறு நீதிவான் இமேஷா பட்ட பெந்திகோ உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பதிவாளர் கடந்த 22 ஆம் திகதி மன்றுக்கு வந்ததாகவும் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதை அடுத்து அவர் பி.சி.ஆர் பரிசோதனை செய்துக்கொண்ட போதே தொற்று இருப்பது உறுதியானது என ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது மூடப்பட்டுள்ள நீதிமன்றம், அதன் வளாகத்திற்கு தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு, அலுவலர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 17 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)