ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (28) செவ்வாய்க்கிழமை பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, 1 மீற்றர் (3.28 அடி) உயர அலைக்கான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்க எச்சரிக்கை
ஜப்பானின் தெற்கு கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட குறித்த பகுதியில் (6758.T) மற்றும் டி.எஸ்.எம்.சி (2330.TW) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, தனது செண்டாய் மற்றும் கென்காய் அணுமின் நிலையங்களில் எந்தவிதமான முறைகேடுகளும் பதிவாகவில்லை என்று கியூஷு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |