கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
கரீபியன் (Caribbean) கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் இன்று (9.2.2025) காலை ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமி எச்சரிக்கை
கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பல தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை (tsunami) விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)