மகாராஷ்டிராவில் ஓடும் தொடருந்தில் தீ விபத்து!
India
Maharashtra
Fire
Mumbai
By Shadhu Shanker
a year ago
மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டம், நாராயண்டோஹ் தொடருந்து நிலையத்துக்கு அருகே பயணிகள் தொடருந்து ஒன்று திடீரென்று தீப்பற்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத் தொடருந்து அஷ்தி தொடருந்து நிலையத்திலிருந்து அகமதுநகர் தொடருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
விபத்துக்கான காரணம்
இந்த தொடருந்து விபத்தில் பயணிகள் ஒருவருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
