பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம்

Jaffna SL Protest Israel Palestine Israel-Hamas War
By Shadhu Shanker Oct 16, 2023 07:24 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்று கூடுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த ஒன்றுகூடல் எதிர்வரும் (21) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த அழைப்பை நேற்று(16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அதன் இணைச் செயலாளர் த.ஸ்ரீபிரகாஸ்  விடுத்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம் | Isreal Hamas War Against Jaffna Protest

ஹமாஸ் உருவாக்கிய திட்டமிட்ட பொறி! அதிரவைக்கும் திக் திக் நிமிடங்கள்

ஹமாஸ் உருவாக்கிய திட்டமிட்ட பொறி! அதிரவைக்கும் திக் திக் நிமிடங்கள்

பலஸ்தீன மக்கள்

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரேலின் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பினால் பலஸ்தீன மக்கள் மேற்கு கரையிலும் காஸாவிலும் சுருக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் அரசாங்கத்தினதும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளினதும் அரசியல் பொருளாதார நலன்களுக்காக காஸா மக்கள் பலியாக்கப்பட்டுவருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தகைய மக்களுக்கு எதிரான கொடூர தாக்குதலைக் கண்டிக்கின்றோம்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம் | Isreal Hamas War Against Jaffna Protest

தலைமன்னாரில் சுமார் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

தலைமன்னாரில் சுமார் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு 

அத்துடன் காஸா மீதான ஆக்கிரமிப்பு யுத்தமானது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டதற்கு ஒப்பானதாக பார்க்கப்பட வேண்டியதே.

எனவே ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு விடுதலை வேண்டி ஒருமித்து குரல் கொடுப்போம். என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கை கூறுவதாவது, இஸ்ரேலிய பயங்கரவாத ஆட்சியினர் காஸா மக்களுக்கான உணவு, மருத்துவம், மின்சாரம், தண்ணீர் ஆகிய அடிப்படைத் தேவைகள் சென்றடைவதை தடுத்ததோடு பல கட்டடங்களைத் தரைமட்டமாக்கி மக்களையும் கொன்றொழித்து வருகின்றனர்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம் | Isreal Hamas War Against Jaffna Protest

பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை!

பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை!

இன அழிப்புக்கு

எல்லா ஒடுக்குமுறைப் போர்களிலும் குழந்தைகளின் உடலங்களே உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைந்து விடுவது போல காஸா குழந்தைகள் பூக்களாகவும், பிஞ்சுகளாகவும் கருகிக்கிடப்பது தாங்கமுடியாத மனவேதனையைத் தருகின்றது.

இந்த அனுபவங்களைத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சுமந்தனர்.

உலக வல்லாதிக்க நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா போன்றன இஸ்ரேலின் காஸா மக்கள் மீதான இன அழிப்புக்கு உடந்தையாக இருப்பதோடு ஏனைய நாடுகள் இந்த அழிப்பை தடுத்து விடக் கூடாது என்பதற்காக கடலிலும் தரையிலும் பாதுகாப்பு அரண்களாக யுத்தக் கப்பல்களையும் தமது படைகளையும் நிலைநிறுத்தியுள்ளன.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம் | Isreal Hamas War Against Jaffna Protest

ஆதரவுக் குரல்

இதில் அவர்களின் அரசியல் பொருளாதார அதிகார நலன்கள் இருக்கின்றது.

காஸா மக்களுக்கு எதிரான இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்து நிற்கும் அரபு நாடுகளும் ஏனைய நாடுகளும் தமது பொருளாதார நலனையும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு தமது அடிமை விசுவாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு : யாழில் கண்டன போராட்டம் | Isreal Hamas War Against Jaffna Protest

உக்ரேன், ரஷ்யப் போரில் ரஷ்யாவுக்கு எதிராய் கண்டனங்களை வெளிப்படுத்தி நின்ற ஜக்கிய நாடுகள் சபை இங்கு அனுதாபங்களை மட்டுமே வெளிப்படுத்தி தனது பக்கச் சார்பை நிரூபித்து நிற்கின்றது.

பாதுகாப்பான சுதந்திரமான பலஸ்தீன நாடு அமைவதை உலகின் பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்டு வருவது போன்று அந்த மக்களின் இறையாண்மைக்காகவும் சுதந்திர உரிமைக்காகவும் பலஸ்தீன மக்களுக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதற்கு ஒன்று கூடுமாறு வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)

போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024