சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி…

Shivaratri Sri Lankan Tamils Sri Lanka
By Theepachelvan Feb 15, 2026 02:35 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report

சிவபூமி எனப்படும் ஈழத்தில் சிவராத்திரி முக்கியமானதொரு வழிபாடாகும். இன்றைய நாளில் விரதமிருந்து இரவு முழுவதும் உறங்காதிருந்து, மூன்றுவேளைப் பூசைகளை முடித்து சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.

ஈழத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றிலும் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அதிகமும் உறங்காத இரவுகளை கொண்ட ஈழமண்ணில் சிவராத்திரி என்பது ஒரு குறியீடு.

என் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டதில் இருந்து எனக்குத் தினமும் சிவராத்திரிதான் என்று ஒரு தாய் சொன்னதுதான் இப் பதிவை எழுதத் தூண்டியது என்பேன்.

ஈழத்தில் சிவநெறி

நாங்கள் சைவர்கள். நீங்கள் என்ன மதம் என்று யாராவது கேட்டால் நான் சைவம் என்றே பதில் அளிப்போம். இலங்கை அரசு எங்களை அழிப்பது இந்துக்கள், சைவர்கள் என்ற அடையாளங்களின் பொருட்டுமே. உண்மையில் நாம் இந்துமதவாதத்தினாலும் பௌத்த சிங்களவாதத்தினாலும் இரு முனைகளாலும் அழிக்கப்படும் சைவர்கள்.

எங்கள் ஆலயங்கள்மீது விமானங்கள் குண்டுகளை  கொட்டின. போரின்போது கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளுடன் எங்கள் ஆலயங்களும் அழித்து நொருக்கப்பட்டன.

சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… | Mahashivaratri The Main Festival Of Eelam

சிவாலயங்களால் நிறைந்த ஈழத்தில் தென்னிலங்கையில் உள்ள சைவ ஆலயங்கள் எல்லாம் முகவரி இழந்துபோய்விட்டன. கதிர்காமம் இன்றைக்கு கதிர்காம என்றாகிவிட்டது. 1000 வருடங்களின் முன்னர் சோழ மன்னன் கட்டிய பொலனறுவைச் சிவன் கோயிலைப் பார்க்கும் போது அழிந்தும் அழியாமலும் இருக்கிற ஈழத் தமிழ் இனம் போல உள்ளது

 தென் பகுதியில் இருந்த சைவ அடையாளங்களை அழித்தும் துடைத்தும் திரித்தும் வந்த சிங்களப் பேரினவாத மதவாதிகள் வடக்கு கிழக்கு எங்கும், சைவ ஆலயங்களின் அருகிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வைத்து தமிழ் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளுகின்றனர்.

சிவபூமி எனப்பட்ட ஈழம்

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர்.

ஈழம் தொன்மையான சைவ மரபுகளை கொண்ட நாடு. ஈழமெங்கும் பரவிக் காணப்படும் ஈச்சரங்கள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன. வரலாறு முழுதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது சைவ ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் உலகமயமாக்கல் சூழலில் ஆலயங்களுடனான நெருக்கமும் குறைந்தது.

சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… | Mahashivaratri The Main Festival Of Eelam

 ஈழத்தில் உள்ள சிவாலயங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

சிவராத்திரி என்பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு. 

அறிவியல் உண்மை

இன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள், அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகிறது.

ஈழத்தின் மண் ஒரு புவியியல் எல்லை மட்டுமல்ல; அது சைவ நினைவுகளால் நனைந்த பரம்பரைத் தாயகம். அந்தத் தாயகத்தின் அனைத்துத் திசைகளிலும் எழுந்து நிற்கும் சிவாலயங்கள், காலத்தைத் தாண்டி வரலாற்றைப் பேசும் மௌனச் சாட்சிகள்.

வடக்கின் நெல்லியடியிலிருந்து கிழக்கின் திருக்கோணமலை வரை, மேற்கின் மன்னாரிலிருந்து தெற்கின் எல்லைப்பகுதிகள் வரை — எங்கு சென்றாலும் சிவனின் திருநாமம் ஒலிக்கும் கோயில்கள் காணப்படுகின்றன.

அவை வெறும் கல் கட்டிடங்கள் அல்ல; ஒரு இனத்தின் வழிபாட்டு அடையாளம், பண்பாட்டு நினைவகம், சமூக ஒற்றுமையின் மையம்.

மீண்டெழுதலின் அடையாளம்

சிவாலயங்கள் ஈழத் தமிழரின் வாழ்வியல் நரம்போட்டில் இணைந்திருக்கின்றன. கிராமம் தோன்றிய இடத்தில் முதலில் எழுப்பப்பட்டது ஒரு கோயில்; அந்தக் கோயிலைச் சுற்றியே வீடுகள், வயல்கள், சந்தைகள் உருவானன.

திரும்பாவை, மகாசிவராத்திரி, ஆனி திருமஞ்சனம் போன்ற வழிபாட்டு திருவிழாக்கள், வழிபாட்டு நிகழ்வுகளாக மட்டுமல்லாமல், சமூக உறவுகளை வலுப்படுத்தும் கலாசார நிகழ்வுகளாகவும் விளங்கின. கோயில் தெருக்கள் மக்களின் சந்திப்பிடங்களாக, உரையாடல்களின் அரங்கங்களாக, கலை மரபுகளின் மேடைகளாக மாறின.

ஈழத்தின் சிவாலயங்கள் வரலாற்றுப் பிணைப்புகளின் சின்னங்களாகவும் திகழ்கின்றன. திருக்கேதீசுவரம், கோணேசுவரம் போன்ற புனிதத் தலங்கள், கடல் காற்றோடு கலந்த புராணக் கதைகளையும், காலனித்துவ கால அழிவுகளையும், மீளுருவாக்கப் போராட்டங்களையும் தம்முள் சுமந்திருக்கின்றன.

பல இடங்களில் அழிக்கப்பட்டும் மீண்டும் எழுந்தும் நிற்கும் கோபுரங்கள், தமிழ் மக்களின் ஆன்மீக உறுதியை வெளிப்படுத்துகின்றன. கல்லில் செதுக்கப்பட்ட நந்தி, லிங்கம், கோபுரச் சிற்பங்கள் முதலியவை அனைத்தும் கலைப்பண்பாட்டின் உச்சத்தைக் காட்டுவதோடு, தெய்வீகத்தையும் தாயக நினைவையும் ஒன்றிணைக்கின்றன.

நம்பிக்கையைக் கட்டி எழுப்பிய சிவாலயங்கள்

 போர்காலத் துயரங்களும் இடம்பெயர்வுகளும் ஈழத் தமிழரின் வாழ்க்கையைச் சிதைத்தபோதும், சிவாலயங்கள் நம்பிக்கையின் விளக்காகத் திகழ்ந்தன. அகதிக் கூடாரங்களில்கூட தற்காலிக சன்னதிகள் எழுந்தன; சாம்பல் நிறைந்த நிலங்களில்கூட தீபம் அணையவில்லை.

துயரத்தின் மத்தியில் “ஒம் நமசிவாய” என்ற மந்திரம் மக்களின் உள்ளத்தில் அமைதியைக் கொடுத்தது. அந்த ஒலி, ஒரு மத நம்பிக்கையைத் தாண்டி, மனவலிமையின் வெளிப்பாடாக மாறியது.

சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… | Mahashivaratri The Main Festival Of Eelam

இன்றும் ஈழத்தின் அனைத்துத் திசைகளிலும் சிவாலயங்கள் எழுந்து நிற்கின்றன. அவை வழிபாட்டு மையங்களாக மட்டுமல்ல; கல்வி, கலாசாரம், சமூக சேவை ஆகியவற்றின் மையங்களாகவும் செயற்படுகின்றன.

மொழி, மரபு, பண்பாடு ஆகியவற்றை தலைமுறைகளுக்கு கடத்தும் பாலங்களாக அவை விளங்குகின்றன. சிவாலயத் தூண்களில் ஒலிக்கும் மணி, கடந்த காலத்தின் நினைவையும் எதிர்காலத்தின் நம்பிக்கையையும் இணைக்கும் ஒலியாகத் தொடர்ந்து ஈழ தேசத்தில் முழங்குகிறது. 

எனவே, ஈழத்தின் அனைத்துத் திசைகளிலும் காணப்படும் சிவாலயங்கள், ஒரு சமயச் சின்னமாக மட்டுமல்ல; ஒரு இனத்தின் வாழ்வியல், வரலாறு, எதிர்ப்பு, நம்பிக்கை ஆகிய அனைத்தையும் தாங்கிய ஆன்மீகச் சின்னமாக நிலைத்திருக்கின்றன. அந்தக் கோயில்களின் நிழலில், ஈழத்தின் ஆன்மா இன்னும் உயிருடன் திகழ்கிறது.

ஈழத் தாய்மார்களின் சிவராத்திரி

ஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள். சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி.

ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர்.

சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… | Mahashivaratri The Main Festival Of Eelam

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காக தாய்மார்கள் உறங்காதிருக்கின்றனர். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக உறங்க முடியாது விழித்தே கிடக்கும் மக்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரியே.

எங்கள் தேசம் விடியட்டும் என்ற வேண்டுதலுடன் எங்கள் மக்களின் துயரங்கள் அகலட்டும் என்ற பிரார்த்தனையுடன் இன்றைய மகாசிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்போம். தமிழர்களின் தெய்வங்களுடனும் போர் புரிந்த வரலாற்றைக் கொண்ட இலங்கை அரசியலில் வழிபாட்டு ஆலயங்களிலும் அத்துமீறல்களை கண்ட கடந்த கால சூழலை நினைவுகொள்வதுடன் இன்றைய நாளில் விரதமிருந்து சிவனிடத்தில் வேண்டுதல்களை வைப்பது மக்களின் பண்பாடும் வாழிபாட்டுரிமையுமாகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மஹா சிவராத்திரி 2026 நேரலை

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026