மகாவலி ஆறு பெருக்கெடுப்பு : நீரில் மூழ்கிய சோமாவதிய வீதி
மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சோமாவதிய வீதி நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கை
இதனால் சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று (07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சோமாவதிய - சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சோமாவதிய விகாரைக்கு நேற்று (06) மாலை வழிபாடுகளுக்காகச் சென்ற பக்தர்கள் சிலர் வெள்ளம் காரணமாகத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 7 மணி நேரம் முன்