ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர்! Kalaimathy 9 hours agoPrint
srilanka
mahinda
america
kamala harris
joe biden
By Vasanth
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் மரபுப்படி நண்பகல் 12 மணிக்கு ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இதன் போது துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி