மக்களை அவமதித்த பின்னர் மகிந்த விடுத்த அழைப்பு- எழுந்தது கண்டனம்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்து போராட்டக்காரர்களை சிறு பிள்ளைகள் என இழிவாகப் பேசிய பிரதமர், தற்போது போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (ஏப்ரல்13) தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை ஒன்றும் புரியாத குழந்தைகளாகக் கருதும் அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், தேவைப்பட்டால், அரசாங்கம் வெளியேறும் திகதியை போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார். மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் முன்னேறி வருவதாகவும், மக்கள் அரசாங்கத்தை விட ஒரு படி மேலே இருப்பதாகவும் அவர் கூறினார்.
“இந்தப் போராளிகளுடன் பேசத் தயார் என்று இன்று காலை பிரதமர் கூறுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்களிடம் என்ன சொன்னார்? அவர்கள் ஒன்றும் புரியாத சிறு குழந்தைகள் அவர்களை கவனமாக பாதுகாக்குமாறு பெற்றோர்களிடம் பிரதமர் கூறினார். இன்று அவர்களை பேச அழைக்கிறார் பிரதமர்.கலந்துரையாட ஒன்றுமில்லை.. மக்கள் போராட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உள்ளது.அரசாங்கம் பதவி விலக ஒப்புக்கொள்கிறதா என்பதை மட்டும் சொல்ல வேண்டும்.
