மொட்டு கட்சியின் ஆன்மிகத் தலைவர் மகிந்தவாம்
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைமைத்துவம் கடந்த மே மாதம் பெரமுனவின் மேடையில் வெற்றிக் கூச்சல்களுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்டதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டார்.
அரசியலில் ஓரளவு புரிதல் உள்ளவர் அதை புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
தலைமைப் பதவிக்கு பசில்
கட்சியின் தலைமைப் பதவிக்கு பசில் ராஜபக்சவின் பெயரைக் கூறுவதற்கு தாம் பயப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கட்சியின் ஆன்மீகத் தலைவர் மகிந்த ராஜபக்ச என்றும் குறிப்பிட்டார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் வேட்பாளராக பசில் ராஜபக்ச வரலாம் என்றும் அவர் கூறினார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்