வெளியேறுகிறார் மகிந்த...! நாமல் விடுத்துள்ள அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளிறே தயாராக இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் வலுக்கட்டாயமாக தங்கவில்லை என்றும் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட உரிமையின் படியே தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியதும், மகிந்த ராஜபக்ச குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக உள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்துகள்
ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி சில தீவிர முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாமல் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், இது தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி பாதாள உலகத்தை அடக்குவதற்கு பாடுபட்டாலும், அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு பாதாள உலகத்திலிருந்து ஏற்படக்கூடிய எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் ஆயுள் பாதுகாப்பை இதுவரை அரசியலமைப்பு உறுதி செய்துள்ளதாகவும், இது அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களின் பதவிக்காலத்தில் முடிவெடுப்பதை எளிதாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
