மகிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்..அஸ்கிரி பீடத்தில் சஜித்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa ) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
நாமல் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் (
Anuradhapura) - ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.
பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரம்
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து , பணத்தினை சட்டைப் பைகளில் அடைத்து, செலவழிக்க முடியாதொரு நிலை உருவாகியுள்ளது.
நாட்டை நாசமாக்கி, அதளபாதாளத்திற்கு கொண்டுசென்றுள்ள ஒரு சாதாரண நிலையே நாட்டில் நிலவி வருகிறது என்று சஜித் தெரிவித்துள்ளார்.
சுமக்க முடியாத அளவிற்கு சுமை
நாட்டு மக்களின் தோள்களில் சுமக்க முடியாத அளவிற்கு சுமை ஏற்றப்பட்டு, இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பல்வேறுபட்ட முட்டாள்தனமான, நாட்டு மக்களை ஏமாற்றும் கருத்துகளை முன்வைப்பவர்களுக்கு, நாம் பதிலளிக்க மாட்டோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |