மொட்டுக்கட்சியின் அடுத்த வேட்பாளர்! மகிந்த வெளியிட்ட தகவல்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் வேட்பாளர் யார் என்பதனை தீர்மானிக்கும் நோக்கில் கட்சியின் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெற்கு ஊடமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இறுதித் தீர்மானம்
வேட்பாளர் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற போதிலும் கட்சியின் இறுதித் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுக்கப்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்குள் இரகசிய சந்திப்புகள் இடம்பெற்றுவருகின்றமை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்