கெப்பிடல் குழுமத்தின் தலைவருக்கு பிரதமர் இரங்கல்
sri lanka
people
mahinda rajapaksha
By Shalini
கெப்பிடல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.ராஜ மகேந்திரன் அவர்களின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திறமையான தொழிலதிபராக இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிக வலையமைப்பை பராமரித்து வந்த ஆர்.ராஜ மகேந்திரன் இலட்சக்கணக்கான மக்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
இவர் ஒரு திறமையான தொழிலதிபராகவும், சமூக சேவையாளராகவும், இந்நாட்டிற்காக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.
இந்த நிலையில், இவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி