மகிந்த பதவி விலகியது தவறு..! சாகர பகிரங்கம்
ராஜபக்சக்களின் ஆட்சியை இன்றும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் ராஜபக்சக்கள் பதவி விலகியிருக்க கூடாது என்பதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதவியிலிருந்து நீக்கும் உரிமை மக்களுக்கு
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். அவரை பதவியிலிருந்து நீக்கும் உரிமையும் அதிகாரமும் அந்த மக்களுக்கு மாத்திரமே உள்ளது.
அதுமட்டுமன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் சிறிலங்கா பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவி விலகியது தவறு.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
