சனத் நிஷாந்த தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்," இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார், அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் சனத் நிஷாந்தவின் மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தை ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        